- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து பெண் பயிற்சி மருத்துவர் கீழே குதித்து தற்கொலை.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து பெண் பயிற்சி மருத்துவர் கீழே குதித்து தற்கொலை.
லட்சுமி காந்த்
UPDATED: Sep 1, 2024, 6:58:14 PM
மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை
காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்களும் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷெர்லின் வயது 23 என்ற ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் பயிற்சி மருத்துவர் 1.9.2024 இரவு மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதிக்க நீண்ட நேரமாக மாடியின் விளிம்பில் உட்கார்ந்து எல்லோருக்கும் மரண பயத்தை உண்டாக்கி கொண்டிருந்தார்.
தற்கொலை
பதட்டத்துடன் எல்லோரும் கவனித்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு சில வினாடிகளில் ஐந்தாம் மாடியில் இருந்து ஷெர்லின் கீழே குதித்தார் . அதில் படுகாயம் அடைந்து இதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
செர்லின் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது காதல் தோல்வி ஏற்பட்டதால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருந்தார் என்றும் அதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்படுகிறது. ஐந்தாம் வருட படிப்பு படித்துக் கொண்டு பயிற்சி மருத்துவராக இங்கு பணியாற்றி வருகிறார்.
Breaking News
இந்நிலையில்தான் மன அழுத்தம் காரணமாக ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து செர்லின் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இவரின் சடலத்தை பொன்னேரி கரை காவல் நிலையத்தினர் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.
Latest Kancheepuram District News
மிகப் பிரபலமான இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஒரு பெண் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் உண்டாக்கி விட்டது.
ஷெர்லின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக அவருடன் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூறுகின்றனர்.