• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தவர் தப்பி ஓடியதால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தவர் தப்பி ஓடியதால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்.

சுரேஷ்பாபு

UPDATED: Oct 24, 2024, 7:46:39 PM

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் ராஜாஜிபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் இவர் வக்கீலாக உள்ளார். இந்த நிலையில் ஹரிஹரன் கடந்த 10 வருடங்களாக அப்பகுதியில் மாத சீட்டு நடத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து அவரிடம் திருவள்ளூர், மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளானவர்கள் ரூபாய் ஒரு லட்சம், இரண்டு லட்சம், ஐந்து லட்சம் வரை மாத சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு ஹரிஹரன் தன்னிடம் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியவர்களுக்கு உரிய முறையில் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆனால் அவரிடம் பணம் கட்டியவர்கள் கேட்ட போது எந்த பதிலும் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

Latest Crime News Today In Tamil

அவருக்கு போன் செய்து கேட்டால் பணம் தருவதாக கூறி தொடர்ந்து அலைகழித்து வந்தார். இவ்வாறாக அவர் ரூபாய் 40 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது. சீட்டு கட்டி பாதிக்கப்பட்டவர்களும், சீட்டு நடத்திய ஹரிஹரனும் வந்திருந்தனர்.

அப்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து ஹரிஹரன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இதனால் ஆத்திரம் அடைந்த அவரிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் அவரை பின்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியே ஓடிவந்தனர் ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீட்டுக்கட்டி பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு வந்து பாதியிலேயே ஓட்டம் பிடித்த ஹரிஹரனை மீண்டும் அழைத்து வந்து விசாரித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Breaking News In Tamil

இதன் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended