திருவேற்காட்டில் வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு விஷம் வைத்த கொடூரன் .
ஆனந்த்
UPDATED: Oct 25, 2024, 7:46:04 PM
திருவள்ளுர் மாவட்டம்
திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் புளூட்டோ தெருவை சேர்ந்தவர் மோகன்(53), இவரது வீட்டில் தெரு நாய்கள் சிலவற்றை வைத்து வளர்த்து வந்தார் அவைகளுக்கு வேண்டிய உணவுகளை தினந்தோறும் தவறாமல் வைத்து வந்துள்ளார்
இவரது வீட்டின் அருகே வசிக்கக்கூடிய பாலாஜி என்பவர் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய் வீட்டை விட்டு தெருவில் வந்த நிலையில் தெரு நாய் ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி இரவு நேரத்தில் உணவில் எலி மருந்தை கலந்து தெரு நாய்களுக்கு கொடுத்துள்ளார். அதனை உட்கொண்ட இரண்டு நாய்கள் இறந்து போனதை கண்டு மோகன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்ததில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு நாய்களை பிரேத பரிசோதனைக்காக வேப்பேரியில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் செல்லமாக வளர்த்த தெரு நாய்களை நபர் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் குறித்து அதன் உரிமையாளர் பேச முடியாமல் கண் கலங்கியபடி பேசியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதையடுத்து பாலாஜியிடம் திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு