• முகப்பு
  • குற்றம்
  • பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது.

பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது.

S.முருகன்

UPDATED: Sep 15, 2024, 6:41:42 PM

Chennai Crime News 

பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் அருகே பூந்தமல்லி போலீசார் கடந்த மாதம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 10 டன் குட்கா இருப்பது தெரியவந்தது. 

மேலும் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஷ்(27), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குட்கா கடத்தல்

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பூந்தமல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் 10 டன் குட்கா கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த செந்தில்(என்ற)கணகலிங்கம்(38), என்பவரை பூந்தமல்லி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பல மாதங்களாக பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்க பெரிய, பெரிய லாரிகளில் எடுத்து வந்து சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது

தொடர்ந்து இவர் யாருக்கெல்லாம் சப்ளை செய்து வந்தார் இவருக்கு பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended