நாகையில் கோவில் திருவிழாவில் டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த விபரீதம்.

செ.சீனிவாசன்

UPDATED: Jun 11, 2024, 8:33:00 AM

நாகை வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போது பெருமாள் வடக்கு வீதியை சேர்ந்த மோகன்ராம் மற்றும் விக்கி ( 20 ), இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ் ( 21 ), காக்கா (எ)டேவிட் (18 ) ஆகியோருக்கு இடையே திருவிழாவின்போது டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பெருமாள் வடக்கு 2வது சந்தில் திருவிழா முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் வெளிநாட்டில் இருந்த வந்த தனது நண்பர் உதயக்குமார் வீட்டில் மோகன்ராம் திருவிழாவில் நடந்த சண்டை தொடர்பான வீடியோவை காட்டிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மோகன்ராம் மீது கோபமடைந்த விக்கி ( 20 ), இவரது நண்பர்கள் ப்ரித்தீவிராஜ் ( 21 ), காக்கா (எ)டேவிட் (18 ) உள்ளிட்ட 5 பேர் உதயக்குமார் வீட்டு வாசலில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறவே, உதயக்குமாரின் தந்தை பக்கிரிசாமி தடுக்க முயன்றுள்ளார். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பக்கிரிசாமியை தள்ளிவிட்டதில் கீழே விழுந்து பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் பக்கிரிசாமி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிருதிவிராஜ், விக்கி இருவரை பிடித்து விசாரணை செய்துவரும் போலீசார் தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

நாகையில் கோவில் திருவிழாவில் டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended