பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு.

ராஜா

UPDATED: Jul 18, 2024, 7:08:08 PM

Latest Theni District News

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில்

தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வரும் நிலையில்

தமிழக கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

பிள்ளையார் அணை

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பூப்பறை சாந்தம்பாறை நெடுகண்டம் ராஜா காடு மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கொட்டகுடி ஆறு,  பிச்சாங்கரை ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காற்றாற்று வெள்ளமாக பிள்ளையார் அணை வழியாக வைகை அணைக்கு சென்றடைகிறது

NEWS

இவ்வாறு அணைப் பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காவல்துறையினர் குளிக்க தடை வைத்துள்ளனர் இருப்பினும் சிலர் ஆட்கள் இறங்கி குளித்து வருகின்றனர்.

அணைப் பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended