- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அரசு ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறை 20 ஆயிரம் அபராதம்
அரசு ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறை 20 ஆயிரம் அபராதம்
செ.சீனிவாசன்
UPDATED: Aug 31, 2024, 4:43:49 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே கொங்கராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (35). இவர் அம்பல் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க் ஆக பணியாற்றி வந்தார்.
இவர் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். 8 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை திருமணம் செய்ய அன்பரசன் மறுத்தார்.
இது குறித்து அந்த பெண் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பரசனை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி கைது செய்தனர்.
Latest Crime News
இந்த வழக்கு நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கை நீதிபதி சோபனா விசாரித்து தீர்ப்பளித்தார்.
இதில் அன்பரசுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அன்பரசு கடலூர் சிறைச்சாலைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
நாகை அருகே அரசு ஊழியர் இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரத்தில் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கும் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.