ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் மிக மோசமாக சீர்கேடாக உள்ளது.

JK

UPDATED: Sep 11, 2024, 1:44:50 PM

எஸ்டிபிஐ கட்சி

எஸ்டிபிஐ கட்சியில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அப்துல்ஹமீது, அகமதுநவவி, நிஜாம்முகைதீன், உமர் பாரூக், அபூபக்கர்சித்திக் ரத்தினம் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

புதிதாக பொறுப்பற்றுள்ள ஒன்றிய அரசு கடந்த இரண்டு முறை சிறுபான்மை முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், மதசார்பின்மைக்கு எதிராக சிவில் சட்டங்களை கொண்டு வந்தது. இப்போதும் மோடியின் 3வது அமைச்சர் அவையில் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகிறது.

வக்பு திருத்த சட்டம்

குறிப்பாக வக்பு திருத்த சட்டம் சமூகத்தை சார்ந்த நிர்வாகித்து வந்த நிலையை அடிப்படையிலிருந்து மாற்றி அரசாங்கத்தின் தலையிட்டு மூலமாக வக்பு நிலங்களை மறைமுகமாக கபளீகரம் செய்கிற நடவடிக்கைகளை வக்பு சட்ட திருத்த மசோதா மூலமாக முன்னெடுத்துள்ளது. 

வக்புச் சட்டங்களை திருத்தக் கூடாது. இந்த திருத்தத்தை எந்த இஸ்லாமிய அமைப்புகளும் முன்மொழிவதில்லை.

இந்தியாவை கார்ப்பரேட் அதானியிடம் அடகு வைப்பது போல வக்பு சொத்துக்களையும் அதானிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் அம்பானிகளுக்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையாக இருந்த வக்பு சட்டத்தை பார்க்கிறோம்.

வக்புச் சட்டத்துக்கான திருத்தங்களை கைவிட வேண்டும். 

பரந்தூர் விமான நிலையம் இடத்தை கையகப்படுத்தும் உத்தரவை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம்

பொது மக்கள், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் கையாகபடுத்தாது என முதல்வர் கூறினார். ஆனால் தற்போது அந்த வார்த்தையை காற்றில் பறக்கவிட்டு இருக்கிறார். மக்கள் அகதிகள் போல மாறி உள்ளனர். இவர்களை கண்டு கொள்ளாத அரசாக திமுக அரசு உள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றுப் பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்களது நெல்களை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விற்று வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் கேட்கின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அதிகாரிகள் 50,000 கேட்டுள்ளனர் அந்த விவசாயி 30 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். அதற்கு தகுந்த போல நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இதனை கண்ட விவசாயி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

அரசு விவசாயிகளிடம் வாங்குகிற நெல்லை சேமிக்க எந்த திட்டமும் இல்லை.

தமிழக முழுவதும் நவீன நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அமைத்திட வேண்டும், லஞ்ச ஊழலை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்தை குறி வைத்துக்கொண்டு இந்தியாவில் சங்பரிவார் சக்திகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாட்டு இறைச்சிக்காக அடித்துக் கொள்கிற 14சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

ஸ்டாலின்

சிறுபான்மையினர் பாதுகாப்பதற்கான மசோதாவை மத்திய, மாநில அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கிறது. அது போல இந்த வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் மிக மோசமாக சீர்கேடாக உள்ளது.

பள்ளியில் ஒருவர் உரை நடத்தப் பின்பு அவர் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் அமைச்சர் பொறுப்பில் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் பள்ளி கல்வித்துறை நடவடிக்கையில் தலையிட வேண்டும். 

நவம்பர் 16ஆம் தேதி சென்னையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 7சதவீத வழங்கிட வேண்டும், தமிழுக சிறையில் உள்ள இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் 26 பேரை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் கோரிக்கை முன்வைத்து பேரணி நடத்த உள்ளோம்.

எனவே இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு 400க்கு அதிகமான கடைகள் மூடப்பட்டது. திமுக பொறுப்பேற்ற பிறகு அதிகமாக கடைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகிறோம்.

மது ஒழிப்பு போராட்டம் திருமாவளவன் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு தேவையான ஒன்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், நியாயமான விஷயம், மதுவிலக்கை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

எங்களுடைய கணக்கின்படி அதிகாரபூர்வமாக 2011ன்படி 5.82 சதவீதம் தமிழகத்தில் சிறுபான்மையினர் முஸ்லிம்கள் உள்ளனர்.

2006 இல் ஒதுக்கீடு 3.5உள் ஒதுக்கீட்டு வழங்கும் போது 5சதவீதமாக இருந்தது. தற்போது 7சதவீதம் உயர்ந்துள்ளது.

எல்லா மக்களுக்கும் அவர்கள் மக்கள் தொகை அடிப்படையில், சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அது எல்லாம் சமுதாயங்களுக்கும் நன்மை வகிக்கும் தமிழகத்தில் சாதிவாரி பீகார் அரசை முன்மாறியாக கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த சதவீத மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பிஜேபி அரசு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு அவர் செயல்படுகின்றனர்.

நெல்லை முபாரக் 

தமிழகத்தில் மொத்த நிர்வாகம் தோற்றுப் போய் உள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு முதல் இடத்தில் வந்துள்ளது. 

கல்வி நிறுவனங்களிலிருந்து மதம் அப்பாற்பட்டிருக்க வேண்டும். அங்கு என்ன பாடம் கற்பிக்கப்பட வேண்டுமோ, என்ன ஒழுக்கம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டுமா அதை செய்ய வேண்டும். மத நடவடிக்கை கல்வியில் இருந்து அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

எந்த மதமாக இருந்தாலும் அது அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு பத்திரிக்கை ஊழியர்களுக்கு உதவிக்கான அறிக்கை வெளியிட்டிருந்தாலும் அதில் கடுமையான முறையில் விண்ணப்பங்கள் உள்ளது  அதை சிறிது தளர்த்தி வழங்க வேண்டும். 

பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் உதவிகள் பெரும் வகையில் எளிமையாக மாற்ற வேண்டும். சிறு குரு பத்திரிக்கையாளர்கள் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக கணக்கில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended