• முகப்பு
  • சென்னை
  • மழைநீர் வடிகால் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுந்தர்

UPDATED: Jun 13, 2024, 1:49:39 PM

சென்னை மதுரவாயல் தொகுதியில் உள்ள 151 வது வார்டு சின்னப் போரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் SCHOOL என்ற தனியார் தொண்டு நிறுவனம் வளசரவாக்கம், ராயபுரம், தேனாம்பேட்டை, மணலி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியது.

அதன்படி ஆக்சிஜன் கருவி, ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சியை கருவி, ஹீமோகுளோபின் மீட்டர், ஐஸ் பேக், குளிரூட்டும் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி,துணை மேயர் மகேஷ் குமார் ,கவுன்சிலர்கள் சங்கர் கணேஷ், ராமபுரம் செல்வகுமார், ராஜீ,வி.வி.கிரிதரன், ஹேமலதா கணபதி,ரமணி மாதவன்,சாந்தி ராமலிங்கம்,செல்வி ரமேஷ் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையின் பிரதான பகுதிகளில் 90 சதவீத மழை நீர் வடிகால் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார். அத்துடன் புதிதாக பல பகுதிகளுக்கு மழை நீர் வடிகால்கள் பணி தேவைப்படுவதாகவும் ஏற்கெனவே உள்ள பகுதிகளில் சேதம் அடைந்திருக்கும் மழைநீர் வடிகால்கள் பணி சீரமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேசமயம் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்காதவாறு கணக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிகால்கள் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பாக மண்டல குழு தலைவருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியின் போது பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

2018 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் நாய்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாகவும், இந்த கணக்கெடுப்பிற்கு பிறகு நாய்களுக்கு கருத்தடை செய்யும் முறை தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். 

இரண்டு மாதங்கள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதாக கூறிய அவர், நாய்களை வளர்ப்போர் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். உரிமம் பெறுவதற்கு வெறும் 50 ரூபாய் தான் கட்டணம் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

VIDEOS

Recommended