திருச்சி அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் 4பேர் கைது
JK
UPDATED: Nov 11, 2024, 1:16:57 PM
திருச்சி மாவட்டம்
காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் 30வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உள்ளது என காட்டுப்புத்தூர் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் பாரதி கடந்த மாதம் 27 -ஆம் தேதி காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கஸ்தூரிபாய் புரம், கோவில் தெரு காமாட்சி மகன் பாலகிருஷ்ணன் வயது (24) என தெரிந்தது தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காட்டுப்புத்தூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எட்டு பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தது தெரிந்தது.
தனிப்படை போலீசார்
தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டதில் குடிபோதையில் பாலகிருஷ்ணனை அடித்து கொன்ற எட்டு பேர் கொண்ட கும்பலில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மேற்குவார்பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் வயது (21) மற்றும் அதே ஊரைசேர்ந்த புவனேஸ்வரன் வயது (24) இவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
Latest Crime News In Tamil
இந்த வழக்கில் மேலும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பிரவீன் குமார் என்கின்ற செம்பட்டையன் (20),அதே ஊரைச் சேர்ந்த காளி என்கிற காளிமுத்து(28) பஜனைமடை தெருவை சேர்ந்த மருது என்கின்ற மருதராஜ்(30)சின்ன முத்தாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிளி என்கிற கணேசன்(43)ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.