நாகர்கோயிலில் கேங் வார் நடத்திய 4 ரவுடிகள்.

முகேஷ்

UPDATED: Apr 16, 2024, 10:25:37 AM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நேற்று இரவு ஏ.ஆர்.கேம் ரோட்டில் குடிபோதையில் கேங் வார் நடத்திய சம்பவ வீடியோ சமூகவலை தளங்களில் பரவியதை அடுத்து அவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்தார்.

இதில் நாகர்கோவில் ராமன்புதூர் சார்ந்த நவீன்குமார், அஜெய்கண்ணன், சஜ்ஜெய்பிரபு மற்றும் ஆதிஷ் ஆகிய 4 நபர்களை அதிரடியாக தனிபடையினர் கைது செய்தனர்.

மேலும் 2 நபர்கள் தலைமறைவு இவர்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன.

  • 1

VIDEOS

Recommended