திருச்சி சமயபுரம் நுழைவாயில் கிரேன் மூலம் இடிக்கப்பட்டது

JK

UPDATED: Aug 4, 2024, 3:15:48 PM

திருச்சி மாவட்டம்

சமயபுரம் நால்ரோடு அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவில் நுழைவாயில். 

இந்த வழியாக லாரி நேற்று முன்தினம சென்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் நுழைவாயில் மேல் பகுதியில் மோதியது. இதனால் நுழைவாயிலின் வலது பக்கத்து தூண் உடந்து சேதமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து நுழைவாயிலின் வழியாக பேருந்து மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மற்றும் வழியில் செல்ல சமயபுரம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

Latest Trichy News Headlines & Updates

பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் சேதுமடைந்த தூண்களை ஆய்வு மேற்கொண்டனர். சேதமடைந்த தூண் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சேதமடைந்த நுழைவாயிலை முற்றிலும் அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் இரண்டு வழிகள் கொண்ட புதிய நுழைவாயில் கட்டுவதற்காக அறநிலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது.

இதனால் சேதமடைந்த நுழைவாயிலை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

மூன்று ராட்சத கிரேன் எந்திரத்தின் உதவியுடன் நுழைவாயிலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்மன், முருகன், விநாயகர் ஆகிய சிலைகளை பணியாளர்கள் அகற்றினார்கள்.

இதனையடுத்து துளையிடும் எந்திரத்தின் மூலம் நுழைவாயிலின் கின்கிரீட் தூண்களில் துளையிட்டு இடிக்கப்பட்டது.

இடிக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை அப்புறப்படுத்தும் பாணியானது தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விரைவில் நுழைவாயில் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended