ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கிடங்கிற்கு ஆவணமின்றி எடுத்துச் சென்ற 700 கோடி தங்கம் பறிமுதல்
லட்சுமி காந்த்
UPDATED: Apr 14, 2024, 1:57:02 PM
மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குன்றத்தூர் அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்டச் மேம்பாலத்துக்கு கீழே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர்.
மேலும், தங்கம் பறிமுதல் செய் யப்பட்டது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஹாங் காங்கில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த தங்கக் கட்டிகளை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதி யில் உள்ள தனியார் நிறுவனத்தின் கிடங்குக்கு வேன் மூலம் கொண்டு சென்றதாகவும்,
அங்கிருந்து பிரபல நகைக் கடைகளுக்கு தங்கக் கட்டிகள் பிரித்து அனுப்பப்படும் எனவும் வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
வேனில் சுமார் 400 கிலோ தங்கக் கட்டிகளுக்கு மட்டுமே ஆவணங்கள் இருப்பதாகவும், ஆனால், அந்நிறுவன ஊழியர்கள் வேனில் 1425 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாகக் கூறியதால் வேனை பறிமுதல் செய்ததாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர்.
மேலும், தங்கம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது குறித்து சென்னை வருமான வரித் துறை அதிகாரிக ளுக்கு வருவாய்த் துறை அதிகாரி கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்பு உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் தங்கம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
ஆவணங்கள் இல்லை என்றால் தங்கக்கட்டிகள் அரசுக் கருவூலத்
தில் சேர்க்கப்படும் எனவும், இதன் மதிப்பு ரூ.700 கோடி இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.