திருச்சி விமான நிலையத்தில் 1. 37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ஊக்க மாத்திரைகள் பறிமுதல்.
JK
UPDATED: Nov 4, 2024, 12:27:38 PM
திருச்சி
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு 100க்கு மேற்பட்ட பயணிகளுடன் வந்தது.
அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைகளுக்கு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட மூன்று பயணிகளை அழைத்து அவரது உடைமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் உடைமைகளில் உரிய அனுமதியின்றி மறைத்து எடுத்து வந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஊக்க மாத்திரைகளை 407பாக்கெட்டுகள் கொண்டு வந்தது தெரியவந்தது அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இந்த மாத்திரைகள் ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஊக்க மாத்திரைகள் எனத் தெரியவந்தது.
தொடர்ந்து அந்த மாத்திரைகளை யார் கொடுத்து அனுப்பினர் இந்தியாவில் யாருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தனர் என்பது குறித்தும் 3பயணிகளிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் இந்திய மதிப்பில் ரூ1.37 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானம் மூலம் தொடர்ந்து தங்கம் நூதன முறையில் கடத்தி வந்த நிலையில் தற்போதுதிருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு சிகரெட்டை தற்போது ஊக்க மாத்திரைகளும் கடத்தி வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.