கமலா ஹாரிசுக்கு ஆதரவு திரட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி.
கார்மேகம்
UPDATED: Oct 13, 2024, 8:55:04 AM
வாஷிங்டன்
அமெரிக்காவில் அடுத்த மாதம் ( நவம்பர்) 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னால் ஜனாதிபதி டிரம்பும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இருவரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
Kamala Harris
கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அவரது பிரச்சார குழு இந்தியர்களை கவரும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது
இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு திரட்ட இந்தியாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்றவருமான ஏ. ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஆசிய அமெரிக்க பசிபிக் தீவு வாசிகளின் வெற்றி நிதியம் ( ஏ ஏ பி ஐ) என்கிற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது
கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடடும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மானின் 30 நிமிட இசை நிகழ்ச்சி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் என ஏஏபிஐ அமைப்பு தெரிவித்துள்ளது
இது தொடர்பான முன்னோட்ட வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள ஏஏபிஐ அமைப்பு ஏ.ஆர். ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி கமலா ஹாரிஸ் பிரச்சாரத்துக்கு ஊக்கமளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.