• முகப்பு
  • தமிழ்நாடு
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்கள்‌ கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்கள்‌ கைது

கார்மேகம்

UPDATED: Jun 26, 2024, 6:28:14 AM

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த மதி வயது 38 ) ராஜேஷ் (35) முத்து செட்டி (70) வைத்தியநாதன் (45) மணிமாறன் (55) கோவிந்தசாமி (60) சுப்ரமணியன் (65) கலைமுருகன் (22) கருங்கால கொருலையா (36) அயோஜிவெங்கட் (36) ஆகிய 10 பேர் கடந்த 21- ந் தேதி அதிகாலை நாகை அக்கரைப் பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் .

இவர்கள் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியாக்கரைக்கு தென்கிழக்கே இந்திய இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்

அப்போது அங்கு மற்றொரு படகில் வந்த  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி துப்பாக்கி முனையில் மிரட்டி நாகை மீனவர்களை கைது செய்ய சுற்றி வளைத்தனர்

அப்போது இலங்கை கடற்படையின் படகும் நாகை மீனவர்களின் விசைப்படகும் எதிர்பாராத விதமாக ஒன்றொடு ஒன்று மோதியது இந்த விபத்தில் இலங்கை கடற்படை வீரர் ரத்னநாயக் என்பவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து படுகாயம் அடைந்தார் 

இதனைத்தொடர்ந்து அவரை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசந்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார் 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் 

மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர் .

இலங்கை கடற்படையினர் அளித்த  புகாரின் பேரில் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் நாகை மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 

இது குறித்து தகவல் அறிந்த நாகை மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended