காஞ்சிபுரம் பகுதியின் புறநகரை விட மாநகராட்சி பகுதியில்தான் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 22, 2024, 10:45:06 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
பட்டுச்சலை உற்பத்தியில் உலக அளவில் பிரசித்திபெற்று, கோவில்கள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாக விளங்குகிற காஞ்சிபுரம் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை கொடிக்கட்டி பறக்கின்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலையில் நிறைந்த, தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்ற இடமாக விளங்குகின்றது. அதேபோல பட்டு சேலைகள் வாங்குவதற்கும், பிரசித்தி பெற்ற தேவராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களை சுற்றி பார்ப்பதற்கும் ஏராளமான வெளி மாவட்ட, மாநில மக்கள் வந்து செல்லுகின்ற இடமாக காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளது.
கஞ்சா
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கின்றது.
பொதுவாகவே புறநகர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விற்பனை செய்யப்பட்டு வந்த கஞ்சா சமீப காலமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் , கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதிகளிலும் , கோவில்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கூலி தொழிலாளிகள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளிலும் , இலக்கு வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு கவரதெருவில் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவரின் மகனான சரவணன் (வயது 22) என்பவர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Latest Kancheepuram District News
பாலாஜி சினிமா தியேட்டர் பின்புறம் உள்ள முட்புதர் பகுதியில் சினிமாவுக்கு வருகின்ற நபர்களிடம் கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்த சரவணனை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் மடக்கி பிடித்து அவருடைய வீட்டில் பீரோ உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர் .
அதில் பீரோ உள்ளிட்ட பல பகுதிகளில், ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 1/4 கிலோ கஞ்சாவை கைப்பற்றி சரவணன் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை செய்தனர்.
காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த இரண்டு வருடங்களாக ஆந்திர மாநிலம் ஓ ஜி குப்பம் பகுதிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பேக்கட்டுகளாக பேக் செய்து ராஜாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News
உலர் கஞ்சாவை பிளாஸ்டிக் கவரில் போட்டு குல்பி ஐஸ் போல நவீன முறையில் விற்பனை செய்யும் செய்து மாணவ சமுதாயத்தை கெடுக்கும் செயலில் செயல்பட்டு வந்த சரவணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சரவணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சென்னை புழல்சிறைக்கு அனுப்பப்பட்டார்.