• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்பகோணத்தில் உலகப் புகழ்பெற்ற மகாமக குளத்தின் சோடசலிங்க கோபுர சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால்  பக்தர்கள் அதிர்ச்சி.

கும்பகோணத்தில் உலகப் புகழ்பெற்ற மகாமக குளத்தின் சோடசலிங்க கோபுர சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால்  பக்தர்கள் அதிர்ச்சி.

ரமேஷ்

UPDATED: Aug 6, 2024, 4:05:50 AM

கும்பகோணம் மகாமகத் திருவிழா

கும்பகோணத்தில் கோவில் நகரமாக விளங்கி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு நடைபெறும் கும்பகோணம் மகாமகத் திருவிழா பிரசித்தி பெற்றதாகவும். மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 சோடசலிங்க மண்டபங்கள் அமைந்துள்ளன. 

மாசி மகம், அமாவாசை போன்ற நாட்களில் மகாமக குளத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.

மகாமகத் குளம்

மகாமகம் குளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள வியாசேஸ்வரர், தினேச்சுரர், பைரவேஸ்வரர் ஆகிய மூன்று சோடச லிங்க மண்டபங்களின் கோபுர சுற்றுச்சுவர் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. 

தினமும் காலை மாலையில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வார்கள். காலை 10 மணிக்கு மேல் கோபுர சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால்  அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.

உலக பிரசித்தி பெற்ற மகாமக குளத்தின், சோடசலிங்க மண்டப சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

VIDEOS

Recommended