திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி ஆபரணங்கள் மாயம் கோர்ட்டில் நகை பொறுப்பாளர் சரண்.
கார்மேகம்
UPDATED: Nov 6, 2024, 10:12:55 AM
இராமநாதபுரம்
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவிலில் ரூ.1- கோடி மதிப்பிலான நகைகள் மாயமான வழக்கில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நகை பொறுப்பாளர் சீனிவாச அய்யங்கார் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்
( ரூ.- 1 கோடி நகைகள் மாயம்)
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் ஆதிஜெகநாதர் பெருமாள் மற்றும் பத்மாஷனி தாயாருக்கு அணிவிப்பதற்காக உள்ள மொத்த நகைகளில் 952- கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள் 1199 - கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும் என ரு.1- கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகியது
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில்
இது தொடர்பாக திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட நகை பொறுப்பாளர் ஆலய ஸ்தானிகர் சீனிவாச அய்யங்கார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஸ்தானிகரிடமும் அந்த காலகட்டத்தில் பணியாற்றியவர்களிடமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர் இந்த மொசடி வழக்கு தொடர்பாக சீனிவாச அய்யங்காருக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியதோடு மோசடி தொடர்பாக சிறப்பு ஆணையம் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது
இதன்படி நடத்தப்பட்ட விசாரணையின் போது சீனிவாச அய்யங்கார் 101- கிராம் தங்க நகைகளையும் 498- கிராம் வெள்ளி நகைகளையும் தனது வீட்டில் வைத்திருந்ததாக கூறி விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தாராம்
மேலும் 38- கிராம் எடையுள்ள மாயமான நகை ஒன்றினை தன்னிடம் உள்ளதாக தெரிவித்து அதே வடிவில் எடை குறைவாக 18- கிராமில் நகை செய்து ஒப்படைத்தாராம்
( கோர்ட்டில் சரண்)
இதை அறிக்கையாக தயாரித்து விசாரணை குழுவினர் அளித்த அறிக்கையை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு சீனிவாச அய்யங்காருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டதோடு அவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனை தொடர்ந்து போலீசார் சீனிவாச அய்யங்காரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்
இந்நிலையில் அவர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்- 2 பொறுப்பு நீதிபதி வெர்ஜின் வெஸ்டா முன்னிலையில் சரண் அடைந்தார் அவரை 15- நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.