• முகப்பு
  • இந்தியா
  • பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் ஹேமா கமிட்டி சினிமாவுக்கு வழிகாட்டியாய் வந்துள்ளது - நடிகை சம்யுக்தா மேனன்

பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் ஹேமா கமிட்டி சினிமாவுக்கு வழிகாட்டியாய் வந்துள்ளது - நடிகை சம்யுக்தா மேனன்

கார்மேகம்

UPDATED: Sep 21, 2024, 9:49:41 AM

சென்னை 

தமிழில் தனுஷ் ஜோடியாக வாத்தி மற்றும் களறி ஜூலைக்காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சம்யுக்தா மேனன் அளித்துள்ள பேட்டி

மற்ற துறைகளைப் போலவே சினிமா துறையிலும் நல்லவையும் கெட்டவையும் உள்ளன

காட்டில் மாட்டிக் கொண்டு வழி தேடும் நிலையில் சினிமா துறை இருக்கிறது இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சிலர் சுரண்டல்களில் ஈடுபட்டனர்.

சம்யுக்தா மேனன்

இந்த நிலையில் தான் ஹேமா கமிட்டி அறிக்கை சினிமா துறைக்கு ஒரு வழிகாட்டியைப் போல் வந்து இருக்கிறது இனிமேல் மலையாள பட உலகில் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு கிடைக்கும் ஹேமா கமிட்டி மலையாள பட உலகுக்கு கேம் சேஞ்சராக மாறும்

சினிமா துறையில் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் இந்த விஷயத்தில் நட்சத்திர அந்தஸ்தை பார்க்க கூடாது

சினிமா துறையில் மட்டுமன்றி பல துறைகளில் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது அதனால் தான் ஹேமா கமிட்டி அறிக்கை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த வில்லை என்றார். 

 

VIDEOS

Recommended