• முகப்பு
  • இந்தியா
  • 78-வது சுதந்திர தின விழா: பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரைகள்

78-வது சுதந்திர தின விழா: பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரைகள்

Bala

UPDATED: Aug 15, 2024, 6:55:32 AM

பிரதமர் மோடி

தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார் :

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 

நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்காகவும் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், தங்கள் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். 

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடே துணையாக இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். செங்கோட்டையிலிருந்து நாடின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் வசதி கொண்டுவரப்பட்டிருப்பதை அவர் தெரிவித்தார். 

ஜல் ஜீவன்

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

2040க்குள் இந்தியா வளர்ந்த நாடாக ஆகும் என்பது வெறும் இலக்கு அல்ல, 140 கோடி மக்களின் கனவாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 

இந்தியா

நாட்டின் மக்கள், இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றார். மேலும், மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

இந்திய நீதித்துறையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றார் பிரதமர். வங்கித்துறையில் சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதை அவர் நினைவூட்டினார்.

"ஒரே தேர்தல் - ஆதரவு தேவை"

"தொடர்ச்சியான தேர்தல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றன"

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது எந்த முன்னேற்றத் திட்டமும் தேர்தலோடு தொடர்புபடுத்தப்படுகிறது

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை எட்ட, நாடு ஒருங்கிணைந்து முன்னேர வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 

நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்து, 50 ஆண்டுகளுக்கு முன் மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் என்று அவர் நினைவூட்டினார். 

சாதாரண மக்கள் தொண்டில் உண்மையோடு செயல்பட்டு வரும் தம்மை தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதை முதல்வர் பெருமையாகக் கூறினார். 

தமிழ்நாட்டின் உயர்ந்த கோட்பாடுகளை இந்தியா முழுவதும் செயல்படுத்தி காட்டும் பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

விடுதலை எளிதில் கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்தின் பின் வந்தது, அதை நினைவில் கொண்டு, சுதந்திரத்திற்காக போராடியவர்களின் இலக்குகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

INDIA | MODI | MK STALIN | INDIAN FLAG

VIDEOS

Recommended