• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் பணிகள் - போக்குவரத்து மாற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு

138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் பணிகள் - போக்குவரத்து மாற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு

JK

UPDATED: Sep 21, 2024, 6:19:58 AM

திருச்சி மாவட்டம்

திருச்சி அரிஸ்டோ அருகில் உள்ள ரயில்வே பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இது மாற்ற அரசு திட்டமிட்டு பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயல்பாட்டு உள்ள நிலையில் தற்போது அதன் அருகில் புதிய பாலம் கட்டப்படுவதற்காக திட்டமிட்டுள்ளது.

ரூபாய் 138 கோடி செலவில் புதிய காலம் கட்டும் பணிக்கான கள ஆய்வு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

District News & Updates in Tamil

இந்த ஆயுள் போது திருச்சி தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் அரிஸ்டோர் ரவுண்டானாவரை போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கள ஆய்வின்போது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி மீனாட்சி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Latest District News in Tamil

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்க உள்ள நிலையில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து காஜாநகர், பகுதிக்கு செல்ல வாகனங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், அதற்காக அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended