12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

அச்சுதன்

UPDATED: Sep 20, 2024, 8:12:24 PM

உதகை

மலை மற்றும் மலை சார்ந்த இடங்களில் மட்டுமே வளரக்கூடிய குறிஞ்சி செடிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் பரவலாக காணப்படுகின்றன. 

ஆண்டுதோறும் பூக்கக்கூடிய குறிஞ்சி செடிகள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி செடிகள் பரவலாக இருந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் முக்குறுதி தேசிய பூங்கா மற்றும் எப்பநாடு, கோடநாடு, அவலாஞ்சி, கிளன்மார்கன் மலை பகுதிகளில் மட்டுமே காணபடுகின்றன.

நீலக்குறிஞ்சி மலர்கள்

இந்நிலையில் உதகை அருகே கெங்கமுடி பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின கிராமமான பிக்கபத்தி மந்து ஒட்டி உள்ள மலை சரிவில் நீல குறிஞ்சி செடிகள் தற்போது பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. 

மலை சரிவுகள் முழுவதுமாக லட்சக்கணக்கான நீலக்குறிஞ்சி செடிகளில் குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

Breaking News Today In Tamil 

320 வகை குறிஞ்சி மலர்கள் நம் நாட்டில் உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 50 வகைகளும் நீலகிரியில் 25 வகைகளும் இருப்பதாக தாவர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலைகள் முழுவதும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அந்த மலையை நீண்ட தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது நீல நிற போர்வையை போர்த்தியது போல ரம்யமாக காட்சியளிக்கிறது.

 

VIDEOS

Recommended