• முகப்பு
  • இந்தியா
  • நாகை - இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது.

நாகை - இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 16, 2024, 9:04:25 AM

இந்திய - இலங்கை

இந்திய - இலங்கை இரு நாட்டு நல்லூறவு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணியர் போக்குவரத்து சேவை துவங்க ஒப்பந்தமானது. 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடல் வழி பண்ணாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி கானொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது ஒரு சில நாட்களே சென்ற செரியாபாணி என்ற கப்பல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நிறுத்தப்பட்டது.

கப்பல் போக்குவரத்து

இந்த நிலையில் இலங்கைக்கு மீண்டும் பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கும் என தனியார் நிறுவனம் அறிவித்தது. ஆனால் சில பன்னாட்டு அனுமதி காரணமாக கப்பல் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து இந்த மாதம் 16 ம் தேதி கப்பல் சேவை தொடங்கும் என அறிவித்த நிறுவனம் அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற பெயரிடப்பட்ட கப்பலை கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சோதனை ஓட்டம் நடைப்பெற்றது.

சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நிறைவுப் பெற்றது இதனை தொடர்ந்து கடந்த 14 ம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதி தொடங்கியது.

Latest India News

இதனையடுத்து இன்று அதிகாரப்பூர்வமாக பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. தரைத்தளத்தில் சாதா வகுப்பு 123 இருக்கைகளும், மேல் தளத்தில் சிறப்பு வகுப்பு 27 இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் கொண்ட இந்த கப்பலில் கேப்டன் உள்பட 15 ஊழியர்கள் கப்பலில் பணியாற்றுகின்றனர்.

சாதா வகுப்பிற்கு 5000 ரூபாயும், சிறப்பு வகுப்பிற்கு 7500 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த கப்பலில் இலங்கை பயணிகள் நான்கு பேர் உட்பட்ட இன்று 44 பயணிகள் பயணம் செய்கின்றனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்பட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைய உள்ளது.

கப்பலில் பயண செய்ய செய்ய கூடிய பயணிகளை நாகை துறைமுக பன்னாட்டு முனையத்தில் டிக்கெட், பாஸ்போர்ட் உள்ளிட்ட குடியுறிமை சோதனளகள் மேற்க்கெள்ளப்பட்டே கப்பலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Srilanka News

கப்பலில் பயணிக்க கூடிய பயணி 25 கிலோ லக்கேஜ் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகளிக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் துரித உணவு வகைகள் டீ, காபி, கூல்டிரிங்ஸ், உள்ளிட்டவை வழங்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்தை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் , பாண்டிச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மற்றும் துறைமுக அதிகாரிகள், நாகை வர்த்தக குழுமத்தினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நாகை, காங்கேசன்துறை

இலங்கைக்கு விமானத்தில் அதிக கட்டணம் செலுத்தி சென்று வந்த நிலையில் தற்போது குறைந்த கட்டணத்தில் செல்வது வசதியாக இருப்பதாகவும், கடல் வழியாக பயணம் மேற்க்கொள்வது புதிய அனுபவமாக இருப்பதாகவும் பயணிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.

நாகை, காங்கேசன்துறை இடையே மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பயணிகள் கப்பல் போக்குவரத்தால் இந்தியா, இலங்கை இருநாட்டு மக்களின் கடல் வாணிபம் மற்றும் முதலீடு மேம்படுவதோடு மட்டுமில்லாமல் இரு நாட்டு மக்களின் பரஸ்பர அன்பு பெருகும் என்பதும் உறுதியாகி உள்ளது.

நாகை, காங்கேசன்துறை | கப்பல் போக்குவரத்து | இந்திய - இலங்கை

VIDEOS

Recommended