• முகப்பு
  • இந்தியா
  • வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக முஸ்லிம்கள் நுழைவு நமது நாட்டிற்கு ஏற்படும் விபரீத விளைவு அசாம் முதல்வர் ஹிமந் பிஸ்வா பளீர் பேச்சு

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக முஸ்லிம்கள் நுழைவு நமது நாட்டிற்கு ஏற்படும் விபரீத விளைவு அசாம் முதல்வர் ஹிமந் பிஸ்வா பளீர் பேச்சு

கார்மேகம்

UPDATED: Sep 2, 2024, 9:58:20 AM

வங்கதேசம்

வங்கதேசத்தில் ஏற்படும் உள்நாட்டு கலவரத்தினால் நமது நாட்டிற்குள் சட்டவிரோதமாக வங்கதேச அகதிகள் நுழைகின்றனர் அவர்கள் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் வழியாக வந்து தென்மாநிலங்களில் தஞ்சம் அடைகின்றனர்

குறிப்பாக தமிழகத்தில் ஜவுளி தொழிலில் இவர்கள் ஈடுபடுகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருக்கின்றனர் என்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்பிஸ்வா கூறியிருக்கிறார்

வங்கதேச முஸ்லிம்கள்

இந்த கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது அசாம் மாநிலத்தில் அத்துமீறி நுழையும் வங்க தேசத்தினரால் என்னென்ன விளைவுகள் அங்கு ஏற்பட்டது என்பதை அவர் சில மாதங்களுக்கு முன்பு தெளிவாக குறிப்பிட்டிருந்தார் 

எனவே இதையும் போலி மதச்சார்பின்மை  என்ற பெயரில் காமாலைக் கண்ணோடு பாராமல் சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைபவர்களை தமிழக அரசு உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இதையும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தாமல் தேசப்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

Breaking News

இப்படி சட்டவிரோதமாக குடியேறும் முஸ்லிம்களால் பொருளாதாரத்தில் மக்கள் தொகையில் மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படும் தமிழகத்தில் ஒரு சில பிரிவினைவாதிகள் உத்தரபிரதேசம் மத்திய பிரதேசத்தில் இருந்து வருபவர்களால் இங்கே பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது என்று பேசுகின்றனர்

நமது நாட்டின் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் அவர்களது மாநிலத்திற்கு திரும்பி சென்று விடுவர் ஆனால் வங்கதேசத்தில் இருந்து வருபவர்கள் இங்கேயே தங்கி விடுகின்றனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

குறிப்பாக தமிழகத்தில் ஜவுளி தொழிலில் மட்டுமின்றி வேறு சில தொழிலில்களிலும் வங்கதேச முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளனர்.

India News

கோவை தொண்டாமுத்தூர் போன்ற கிராம பகுதிகளில் பாக்கு உரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது 

எனவே தமிழக அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஆய்வு செய்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தேசப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னனி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

 

VIDEOS

Recommended