- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து.
சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து.
அந்தோணி ராஜ்
UPDATED: Oct 13, 2024, 8:39:33 AM
சிவகாசியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையினால் சிவகாசி முக்கிய வீதியான என்.ஆர்.கே.ஆர் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இதனிடையே சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள ஒத்தபுலி பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இடி மின்னல் தாக்கியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதுடன் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமானது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு