- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.
JK
UPDATED: Aug 17, 2024, 12:27:19 PM
திருச்சி
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் மர்மநபர்கள் புகுந்து போராட்டத்தை கலவரமாக மாற்றியதும், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் பதற்றத்தை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
இதையடுத்து, இன்று காலை முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தமானது இன்று காலை ஆறு மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ சங்கம் விடுத்த வேலை நிறுத்தத்திற்கு மற்ற மருத்துவ சங்கமும் ஆதரவு அளித்துள்ளன. நாட்டிலே மிகப்பெரிய மருத்துவ சங்கமான இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அத்தியாவசிய மருத்துவ பணிகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் எப்போதும் போல் அனைத்து மருத்துவர் கொண்டு இயங்கி வருகிறது. மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திருச்சி மருத்துவம் கல்லூரி முதல்வர் வர்ஷாபேகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நடைபெற்ற வன்கொடுமைக்கு மருத்துவர் ஆகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் மருத்துவர்கள் பணியாற்று வருகின்றனர்.
Latest Breaking News
அறுவை சிகிச்சை பிரிவுகளிலும், அவசர சிகிச்சை பிரிவுகளும் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
இன்று இந்தியா மருத்துவ சங்கத்தின் அறிவிப்பும்படி திருச்சியில் இன்று மாலை 4மணி அளவில் நீதிமன்றம் அருகில் இருந்து மருத்துவர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளிக்க உள்ளனர்.