ஹார்டுவேர்ஸ் கடை போர்வையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து அமோக விற்பனை.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 6, 2024, 12:29:43 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
ஒரகடம் அடுத்த கண்டிகை கிராமத்தில் கைலாஷ் (வயது 18) என்ற வட மநில இளைஞர் மா ஆசாபூரா எலக்ட்ரிகல் அண்ட் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றார்.
பெங்களூருல் இருந்து போதை புகையிலை, மற்றும் பாக்குகளை மொத்தமாக வாங்கி எலக்ட்ரிகல் ஐட்டங்கள் மற்றும் ஹார்டுவேர் ஐட்டங்களின் மத்தியில் வைத்து கடத்தி தமிழகத்துக்கு கொண்டு வந்து கடையில் பதுக்கி வைத்து சிறுசிறு வியாபாரிகளுக்கு எலக்ட்ரிகல் பொருட்கள் விற்பனை செய்வது போல குட்கா ஐட்டங்களை விற்பனை செய்து பல லட்ச ரூபாய் லாபம் பார்த்து வந்துள்ளார்.
மிகப் பிரபலமான இந்த கடையில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை என்ற போர்வையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்து வருவதை காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் ஆகியோர் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் இருந்து வந்தனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது .
அதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கண்டிகையில் உள்ள கடையில் சென்று கடை மற்றும் வீட்டை சோதனையிட்டனர்.
சோதனை இட்டதில் வீட்டின் உள்ளே மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை கண்டறிந்து கைப்பற்றினர். அதில் ஹான்ஸ் 1425, கூல் லிப் 368, சுவாகத் பாக்கு 640, விமல் பாக்கு 3390, வி ஒன் 3390 என மொத்தம் 9 2 1 3 பவுச் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதை வஸ்துகளின் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இதில் கடையின் உரிமையாளர் கைலாஷ் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.