- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஏழு மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா.
ஏழு மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 17, 2024, 12:00:35 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
மேட்டுப்பாளையம் ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்த அஜித் டயானா தம்பதிகளுக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.
படு சுட்டியான இந்த ஆண் குழந்தை வீட்டில் தழுந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே இருந்த ஒன்றரை இன்ச் சுற்றளவு அகலம் உள்ள பிரபல நிறுவனத்தின் தைல டப்பாவை எடுத்து வாயில் போட்டு உள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு
அந்த டப்பாவை வெளியே துப்ப தெரியாமல் குழந்தை சிரமப்பட்டு முழுங்க முயன்று உள்ளது. பெரிய சுற்றளவு உள்ள இந்த தைல டப்பா குழந்தையின் தொண்டையில் சென்று பலமாக சிக்கிக் கொண்டது.
குழந்தை மரண ஓல அழுகையைக் கண்ட பெற்றோர்கள் குழந்தையை தூக்கி என்ன ஏது என கவனித்துக் கொண்டிருந்தபோதே குழந்தையின் வாயிலிருந்து குபு குபுவென ரத்தம் கொட்டியது.
குழந்தை உயிருக்கு போராடிய நிலையை கண்ட பெற்றோர்கள் குழந்தையை தூக்கிக் கண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
Doctors
அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதை கண்டு சென்னை எக்மோரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டனர்.
ஆம்புலன்ஸ் வருகின்ற நேரத்துக்குள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய டப்பாவை எடுக்கலாம் என்ற முடிவுக்கு மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பாலாஜி மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மணிமாலா ஆகியோர் முடிவு எடுத்து சில வினாடிகள் ஆலோசனை செய்தனர்.
Breaking News Today In Tamil
பின்னர் குழந்தையை மென்மையாக தூக்கி பிடித்து "நுணுக்கமாக செயல்பட்டு தொண்டைக்கும் மூச்சு குழலுக்கும் இடையில் பலமாக சிக்கி இருந்த தைல டப்பாவை குரல்வளை காட்டி என்ற முறையில் போராடி தைல டப்பாவை மிக லாவகமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.
தைல டப்பாவை தொண்டையில் இருந்து எடுத்த பின்னர் குரல் வளைக்கும் தொண்டைக்கும் எந்தவிதமான சேதமம் இல்லை, குழந்தையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று உறுதி ஏற்பட்ட பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்து குழந்தையை கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவர்களுக்கு பாராட்டுகள்
சமீபகாலமாக அரசு தலைமை மருத்துவமனையில் சரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்ற நிலையில், 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அறுவை சிகிச்சை இன்றி மிக லாவகமாக எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிக்கின்றது.
ஏழு மாத ஆண் குழந்தையை தனியே விட்டுவிட்டு கவனக்குறைவாக இருந்த குழந்தையின் பெற்றோர்களால் தான் இது போன்ற ஆபத்தான நிலை குழந்தைகளுக்கு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.