கோயம்பேட்டில் பிரபல பைக் திருடன் கைது.

ஆனந்த்

UPDATED: Oct 24, 2024, 11:20:19 AM

சென்னை

கோயம்பேடு, விருகம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதங்களாக இரவு நேரத்தில் பைக்குகள் திருடப்பட்டு வந்தன. குறிப்பாக பல புல்லட் பைக்குகளில் பேட்டரிகள் மட்டும் திருடப்பட்டன. 

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு அருகே பைக் ஒன்றில் இருந்து பேட்டரி திருடப்படும் சிசிடிவி காட்சிகள் கோயம்பேடு போலீசாருக்கு கிடைத்தன.

அதன் அடிப்படையில் கோயம்பேடு குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளில் உள்ள நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

விசாரணையில் அவன் மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவன் புல்லட் ராஜ் என்று அழைக்கப்படும் ராஜ் என்பது தெரிய வந்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகள் மற்றும் அவற்றின் பேட்டரியை திருடுவதை இவன் வழக்கமாக வைத்திருந்து உள்ளான்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளான். புல்லட் பைக்குகளின் பேட்டரியை தொடர்ந்து திருடுவதால் இவன் புல்லட் ராஜ் என அழைக்கப்படுகிறான்.

இவனிடமிருந்து 5 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended