• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் புகார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் புகார்.

சுந்தர்

UPDATED: Apr 14, 2024, 6:08:15 AM

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் அரசு ஊழியர்கள் பணி செய்வது குறித்த வாக்கு பயிற்சியும், தபால் வாக்குகள் பதிவு செய்வதும் பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியக்கூடிய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயிற்சி பெற்ற நிலையில் சிலர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்த ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கவில்லை என ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்

இதுவரை தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கு இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை தபால் வாக்குகள் செலுத்தப்படவில்லை எனவும் மீண்டும் மனு அளித்திருப்பதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்கள். 

தற்போது எழுதிக் கொடுத்துள்ள மனுவில் ஏப்ரல் 18ஆம் தேதி தபால் வாக்குகள் செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அன்றைய தினத்தில் வாக்கு சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டிய இருப்பதால் தபால் வாக்குகளை

செலுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அப்படி இல்லை என்றால் தங்களது தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நடை பெறுவதற்குள் செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

100 சதவீதம் வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு ஊழியர்களே 100 சதவீதம் தபால் வாக்குகளை செலுத்த முடியாத நிலை ஏற்படுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

VIDEOS

Recommended