- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் மேயர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு.
கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் மேயர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு.
ரமேஷ்
UPDATED: Aug 8, 2024, 6:52:01 PM
கும்பகோணம் மாநகராட்சி
தமிழகத்தின் ஒரே காங்கிரஸ் கட்சி மேயராக கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் இருந்து வருகிறார். அவருக்கும் திமுக துணை மேயர் சுப தமிழழகனுக்கும் இடையே முட்டலும் மோதலும் அதிகரித்து வருகிறது.
இவருக்கு ஆதரவாக அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் சரவணனுக்கு எதிராக போர் கொடி தூக்கி வருகின்றனர்.
காங்கிரஸ் மேயர்
இந்நிலையில் சரவணன் மேயராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் முறையாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களுடன் கும்பகோணம் வளர்ச்சி திட்டம் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தகவல் அளித்திருந்தார்.
கூட்டம் அரங்கிற்கு மேயர் சரவணன் 11.20க்கு வந்து காத்திருந்தார். 12 மணி வரை திமுக உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் உள்ளிட்ட யாரும் கூட்டரங்கிற்கு வரவில்லை.
அதிமுக | கம்யூனிஸ்ட்
அதிமுக உறுப்பினர்களான பத்மகுமரேசன் , ஆதிலட்சுமி ராமமூர்த்தி, கௌசல்யா ஆகியோரும், திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை அறிந்து அரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் தாமதமாக வந்தார். நான்கு பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கி விட்டதாக மேயர் தெரிவித்தார்.
திமுக
பின்னர், கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்ததால் நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்ததை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு கூறினார்.
இதனால் மேயருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அலுவலகர்கள் மூலம் வலுக்கட்டாயமாக செய்தியாளர்களை வெளியே அனுப்பி வைத்தார்.
காங்கிரஸ் கட்சி
மேயர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினரும் புறக்கணித்தது கும்பகோணம் மாநகராட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.