• முகப்பு
  • குற்றம்
  • திருவள்ளூர் நியாய விலை கடையில் நியாயமே இல்லாமல் செயல்படும் அரசு அதிகாரிகள்.

திருவள்ளூர் நியாய விலை கடையில் நியாயமே இல்லாமல் செயல்படும் அரசு அதிகாரிகள்.

ராஜ்குமார்

UPDATED: Apr 17, 2024, 6:54:40 PM

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது 01 ஏ பி 126 pn நியாய விலை கடை இதன் விற்பனையாளராக ரகு என்பவர் பணியாற்றி வரும் நிலையில் அவர் தினமும் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் 

அவருடன் இரண்டு ஆட்களை அரசு நியாய விலைக் கடையின் உள்ளே  இவருக்கு உதவியாக அமர்த்தி உள்ளதாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் எடை அளவு மிகவும் குறைவாக உள்ளதாகவும்

மண்ணெண்ணெய், சமையலெண்ணெய் போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் அவர்கள் செல்போன் எண்ணிற்கு பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல்கள் மட்டும் வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

அதுமட்டுமில்லாமல் நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் சோப்பு, டீ, தூள், உப்பு போன்ற பொருட்களை வாங்கினால் மட்டுமே அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என்றும் இல்லையென்றால் எந்த பொருளும் வழங்கப்படாது

என்னை விற்பனை செய்ய சொன்னதே மாவட்ட வழங்கல் அலுவலகமும் கூட்டுறவுத்துறை அலுவலகம் தான் என்று பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசி பொருட்களை வழங்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும்

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அங்கு சென்று நியாயத் விலை கடையில் உள்ள தராசையும் வெளியே மளிகை கடையில் இருந்து கொண்டு வந்த தராசையும் ஒப்பிட்டுப் பார்த்ததாக கூறப்படுகிறது.

அப்போது பத்து கிலோவிற்கு ஏறக்குறைய 1 1/2 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அங்கு வந்து அதிகாரிகள் நியாய விலை கடை விற்பனையாளர் ரகுவிற்கு ஆதரவாக பேசி சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் ரகு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் இந்த முறை கேட்டில் ரகுவை ஈடுபட வைத்த அதிகாரிகள் மீதும்  உடனடியாக ஒழுங்கு நடக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  • 5

VIDEOS

Recommended