பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 6 மாதம் நடைபெறாத அவலம்.

ராஜ் குமார்

UPDATED: Sep 2, 2024, 8:27:31 AM

திருவள்ளூர் மாவட்டம்

பூண்டி ஒன்றியம் மாவட்டத்தில் முக்கிய ஒன்றியமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகின்றது இந்த சூழ்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில் நிதி நெருக்கடியாலும் போதிய ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகம் கொடுக்காததாலும் தமிழகத்திலேயே மோசமான ஒன்றியமாக மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முடியாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களும் ஒன்றிக்குழு தலைவரும் துணைத் தலைவரும் பரிதவித்து வருகின்றனர்.

தொகுதி எம்எல்ஏவிடம் மாவட்ட ஆட்சியரிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் பாரபட்சமாக நடத்தப்படுகின்றதால் மோசமான ஒன்றியமாக கடந்த ஐந்து வருடங்களாக கவுன்சிலர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்று யோசனை செய்து ஐந்து வருடங்கள் சென்று விட்டு கடைசி கூட்டத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது

அந்தக் கூட்டமும் கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாமல் இருக்கின்ற அவலங்கள் தற்போது வரை நீடித்து வருகின்றது. மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை பூண்டி ஒன்றியத்தில் 18 கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

Breaking News

இதில் திமுகவில் 8 உறுப்பினர்களும் அதிமுக கூட்டணியில் 10 உறுப்பினர்களும் கவுன்சிலாக செயல்பட்டு வருகின்றனர் இதன் தலைவராக அதிமுக ஒன்றிய குழு தலைவராக வெங்கட்ரமணா துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மோதிலால் இருந்து வருகின்றனர் 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒன்றியத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது இதில் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்து நிதி ஒதுக்கீடு செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது

கடந்த ஆறு மாதங்களாக ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடைபெறவில்லை வளர்ச்சிப் பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஒதுக்கிய போது நிதி இல்லாததாலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த ஆறு மாதங்களாக ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை கூட்டவில்லை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்த பகுதியில் பணிபுரிவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்

Latest Thiruvallur District News

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் தன் பங்குக்கு மனை அங்கீகாரங்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் செய்து தனக்கு மட்டுமே ஆதாயத்தை தேடிக் கொண்டு லட்சக்கணக்கில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்காமல் கடைசி நிமிடத்தில் தப்பித்து சென்று விட்டார் 

இதற்கு பதிலாக அப்பாவி விஜயகுமார் ஒருவர் சிக்கிக்கொண்டார் இதில் சிக்க வேண்டிய ஸ்டாலின் தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார்

இவர் எங்கும் நிரந்தரமாக பணி புரிவதில்லை பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் அதிக அளவில் இருந்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன்?எதற்கு என்று தெரியவில்லை? வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் தனக்கு மட்டும் ஆதாயம் தேடிக் கொண்ட பணிகளில் ஈடுபட்டு கவுன்சிலர்கள் மத்தியில் நல் உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் அலுவலகத்துக்கு வராமல் நடமாடும் வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்டு வந்தார் தற்போது இவர் மாற்றப்பட்டுள்ளார்

Latest Political News

கடந்த பிப்ரவரி மாதம் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற பல்வேறு தீர்மானங்கள் இன்னும் அமல்படுத்தவில்லை இதில் பாரபட்ச நிதி ஒதுக்கீடு தொடர்பாக கவுன்சிலர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்திய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது 

மேலும் கடந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மற்றும் இதர பிரிவுகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் கோப்புகள் தேங்கி கிடக்கின்றன எனவே ஒன்றிய கவுன்சில் கூட்டம் முறையாக நடத்தப்படாததால் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை நிரப்ப முடியாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் ஒன்றிய அலுவலக நிர்வாகம் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது

தமிழகத்திலேயே மோசமான ஒன்றியமாக பூண்டி ஒன்றிய அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே இருந்தும் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாமல் ஒன்றிய அலுவலகம் திணறி வருகின்றது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் நாங்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களை சந்திக்க முடியாமல் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாமல் இன்றுவரை மக்களை சந்திக்க முடியவில்லை புதிதாக இனிமேல் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவார்களா? என்ற நிலைக்கு ஒன்றிய அலுவலகமே கொண்டு சென்றுள்ளது

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆறு மாதமாக நடைபெறாத ஒன்றிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்தி கடைசி கூட்டத்தில் ஆவது கவுன்சிலருக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு பணிகள் நிறைவேற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended