- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கும்பகோணத்தில் மனிதர்கள் போல் செயல்படும் ரோபோவானது அறிமுகம்.
கும்பகோணத்தில் மனிதர்கள் போல் செயல்படும் ரோபோவானது அறிமுகம்.
ரமேஷ்
UPDATED: Oct 1, 2024, 6:59:36 PM
ரோபோ
கும்பகோணத்தில் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் உள்ள கார்த்தி வித்யாலயா தனியார் பள்ளியில் HUBOTECH SOLUTION, KRISHNA ENTERPRISE AND ROBOTICS COMPANY மூலம் மனிதர்கள் போல் செயல்படும் ரோபோவானது மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் மிகவும் உபயோகப்படும் வகையில் உள்ளது.
இந்த ரோபோவினை கார்த்தி வித்யாலயா பள்ளியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அசோசியேஷன் தலைவர் நந்தகுமார், அறிமுகப்படுத்தினார்கள், மேலும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் துணைத் தலைவர் ரவிக்குமார், இந்த ரோபோவின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.
ரோபோவானது மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு எந்திரமாகும். இந்த ரோபோவானது ஏ 1 தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோவாக உள்ளது. இந்த ரோபோ மூலம் மாணவ மாணவியர்கள் தாங்கள் அரிய விரும்பும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இது மனிதர்கள் போலவே செயல்படும் சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. நாம் இந்த ரோபோவின் அருகில் நின்று ஏதேனும் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அது நமக்கு அளிக்க தேவையான விவரங்களை தன்னுள்ளே சேகரித்துக் கொண்டு நாம் கேட்கும் நேரத்தில் உடனுக்குடன் தெரிவிக்கும்.
இது மிகவும் சிறப்பான தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. இந்த ரோபோவானது மனிதருக்கு நிகரான அறிவுடன் செயல்படுகிறது. இந்த ரோபோவினை மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவ மாணவியர்கள் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதமாக அமையும்.
இன்று இந்த ரோபோவில் பயன்படுத்த விதம் இந்த ரோபோவினால் ஏற்படும் நன்மைகள் இந்த ரோபோவின் மூலம் அறிய விரும்புகிறேன் எவ்வாறு அறிந்து கொள்வது ஆகியவற்றை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியானது மாணவ மாணவியர்களுக்கு மிகவும் உபயோகப்படும் வகையில் அமையும் என்பதனால் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கார்த்திகேயன், சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியானது மாணவர்களின் பொது அறிவினை மேம்படுத்தும் நிகழ்ச்சியாகவும் மாணவர்களுக்கு சிந்தனையை தூண்டும் விதமாகவும் அமைகின்றது.
நிகழ்ச்சியின் பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் பல்வேறு புதிய தகவல்களை தெரிந்து கொண்டனர்.