பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபம் கிடைக்கும் என 60 லட்சம் மோசடி
ஆனந்த்
UPDATED: Aug 29, 2024, 7:46:33 PM
சென்னை
அம்பத்தூர், ஓரகடம், காந்தி பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிளாட்வின் (வயது 37). இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தனது வீட்டின் முதல் தளத்தில் வீடு கட்ட , தனியார் வங்கி மூலம் ரூ.16 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இதனையறிந்த இவரது நண்பர் உமேஷ்குமார் ( வயது 33) கிளாட்வினிடம் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், 3 மாதத்தில் இரண்டு மடங்காக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறினார்.
அதனை நம்பிய கிளாட்வின் முதலில் ரூ 5 லட்சம் பணம் கொடுத்தார். பின்னர் ரூ.16 லட்சத்தை உமேஷ் குமார் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
Latest Crime News
தொடர்ந்து உறவினர்கள் மேலும் எனது உறவினர்கள் மூலமாக கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை பெற்று சுமார் ரூ.60 லட்சம் வரை உமேஷ்குமாரின் மதுரையில் உள்ள வங்கி கணக்கிற்கு 2021முதல் 2022-ஆம் ஆண்டு வரை அனுப்பி வைத்துள்ளார் கிளாட்வின்.
அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து கிளாட்வின் பணத்தை கேட்ட போது, உமேஷ்குமார் கொடுப்பதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
மேலும் கடந்த டிசம்பர் 2022-ஆம் ஆண்டு கிளாட்வின், உமேஷ்குமாரை தொடர்பு கொண்ட போது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கிளாட்வின், உமேஷ்குமாரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
Breaking News
இது குறித்து கிளாட்வின் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.அதன் உமேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புலன் சிறையில் அடைத்தனர்.