• முகப்பு
  • வானிலை
  • தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.

கார்மேகம்

UPDATED: Oct 10, 2024, 9:30:44 AM

வானிலை

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 13- ம் தேதிவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இன்று முதல் நாளை வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended