மதுகடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 காவல்துறையினர்.
ஜெயராமன்
UPDATED: Jul 30, 2024, 7:33:16 PM
திருவாரூர்
மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் ஹரிஹரன், கணேசன் ஆகிய இருவரும் நேற்று திருவாரூர் அருகே வைப்பூர் பகுதியில் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர்.
அதில் 35 வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் மாவட்டத்திற்கு வேலைக்காக செல்வதும் தெரியவந்தது.
Tamil Nadu Crime News
இந்த நிலையில் காவலர்கள் இருவரும், மது கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சமாக ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அந்த வேனை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
லஞ்சம்
இதையடுத்து மதுவிலக்கு காவலர்கள் ஹரிஹரன், கணேசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு