• முகப்பு
  • அரசியல்
  • ரயில் விபத்து ராகுல்காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது - எல்.முருகன்.

ரயில் விபத்து ராகுல்காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது - எல்.முருகன்.

JK

UPDATED: Oct 12, 2024, 11:01:20 AM

திருச்சி

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கருடாழ்வார், மூலவர் ரங்கநாதசுவாமியையும் பின்னர் பிரகாரமாக வலம்வந்து தாயாரை வழிபட்டார்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த எல்.முருகன் 

பெருமாளை வழிபடும் வைசிய குலத்தை சேர்ந்த நாங்கள் நான்கு வாரம் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம், இந்தப் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டது மிகுந்த பாக்கியமாக கருதுகிறேன்.

எல்.முருகன்

கவரப்பேட்டை ரயில்விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, அதே போன்று திருச்சி விமான தொழில்நுட்ப கோளாறு குறித்தும் இன்றையதினம் விசாரணை நடைபெற்ற வருகிறது. விசாரணை முடிவில் அதன் அறிக்கையில் விபரம் தெரியவரும்.

ரயில்விபத்து சம்பவத்தில் ராகுல்காந்தி அரசியல் செய்யக்கூடாது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதேவேளையில் ராகுல்காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது கடந்த 10ஆண்டுகளில் ரயில் விபத்து குறைந்துள்ளது. ரயில்வே துறையினர் சிறப்பாகவும், வேகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

ராகுல்காந்தி

வந்தேபாரத் ரயில் தொடங்கி புல்லட் ரயில் வரை அதிகமான ரயில்வே நெட்வொர்க்கை வைத்துள்ளது இந்தியா தான். பிரதமர் மோடி அவர்கள் ரயில்வே உயர்ந்த தரத்திற்கு உயர்த்தி உள்ளார் ரயில்வே பாதுகாப்பு கவசங்களுக்கு கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிறிய விபத்தை வைத்து ரயில்வேயை குறைகூற முடியாது ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

பேட்டின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன். முன்னாள் நிர்வாகி பார்த்தசாரதி உட்பட கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended