சேத்தியாத்தோப்பு அருகே குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் காணவில்லை.

சண்முகம்

UPDATED: Aug 31, 2024, 5:38:19 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வள்ளலார் குழந்தைகள் இல்லம் இருந்து வருகிறது. 

இந்த இல்லத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அக்கடவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரசாமி என்பவரின் மகன் ஜோதி முருகன்(13) என்பவர் தங்கி இருந்து வந்தார்.

Breaking News

இந்நிலையில் இவர் திடீரென கடந்த 28 தேதி மதியம் காணாமல் போனார்.

இதுகுறித்து குழந்தைகள் இல்லத்தின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து காணாமல் சென்ற சிறுவனை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

 

VIDEOS

Recommended