உணவு தீர்ந்து விட்டதாக கூறிய ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுப்பட்ட மூன்று பேர்.
ஆனந்த்
UPDATED: Sep 9, 2024, 9:18:03 PM
Latest Crime News In Tamil
சென்னை, ராமபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு உணவு சாப்பிட வந்த மூன்று நபர்கள் சாப்பிடுவதற்கு உணவு உள்ளதா என கேட்ட நிலையில் செந்தில்குமார் உணவுகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று நபர்களும் செந்தில்குமாரை மிரட்டி அவரது மகனையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
Latest Chennai News In Tamil
மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மோகன் பிரபு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ராமபுரம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமாபுரத்தை சேர்ந்த தீபக்(21), ஆகாஷ்(22), பிரவீன் குமார்(24), ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தீபக் மற்றும் பிரவீன் குமார் மீது குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு