உதகை அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியது இரண்டாம் கட்ட சீசனுக்கான மலர் கண்காட்சி.

அச்சுதன்

UPDATED: Sep 27, 2024, 8:00:10 PM

நீலகிரி மாவட்டம்

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 4.50 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த மலர்செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கிட்டத்தட்ட 70 வகையை சேர்ந்த டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்ட், பிரெஞ்ச்மேரிகோல்ட், டெய்ஸி, காலன்டுலா, ஆந்துரியம் போன்ற பல்வேறு வகைகளைச் சேர்ந்த செடிகளில் மலர் பூத்துக் குலுங்குகின்றன. 

மேலும் 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சி

அதேப்போல் 2000 மலர் தொட்டிகளை கொண்டு புல்வெளி மைதானத்தில் வண்ணத்துப்பூச்சி, ஐ லவ் யூ ஊட்டி போன்ற அழகான வடிவமைப்புகளும், செல்போன் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் குழந்தைகளுக்கு வெளியே சென்று விளையாட விழிப்புணர்வு தூண்டும் வகையில் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிரிக்கெட், பேட்மிட்டன் போன்ற வடிவமைப்புகள் அலகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியானது அக்டோபர் மாதம் இறுதிவரை நடத்தப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended