மீன்வளத்துறைக்கும்‌ தமிழக அரசுக்கும் மீனவர்கள் கோரிக்கை

கார்மேகம்

UPDATED: Jun 21, 2024, 1:52:37 PM

பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதி சார்ந்த 6 மாவட்டங்களில் மீன்பிடி தொழில் அழிவை நோக்கியுள்ளது அதனை பாதுக்கும் வகையில் ஆக்க பூர்வமான திட்டங்கள் ஏதும் உண்டா ?

இரண்டு மாதம் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும் பொழுது எதுவெல்லாம் நடக்கும் அது நடந்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் கடந்த முறை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரிவித்து இருந்தோம்

அது அத்தனையும் இப்போது நடந்து முடிந்துள்ளன சிறிய விசைப்படகு ஒன்றில் வந்த இறால் 250 முதல் 300 வரை விலை குறைப்பு செய்துள்ளனர்.

இதுவே பெரிய படகுகளில் வந்த இறால் மீன்களுக்கு சுமார் 800 வரை விலை குறைப்பு செய்துள்ளனர் பெரும்பாலான படகுகளில் ( ஐஸ்) வைத்து பதப்படுத்த முடியாமல் போனதை யொட்டி கீழே வீணாக கொட்டிய மீன்கள் மட்டும் குறைந்தபட்சம் படகு‌ ஒன்றுக்கு 30 கிலோ வரை வீணாகியது

இதன் மார்கெட் மதிப்பு 50 ஆயிரம் இது போன்ற பாதிப்புகள் மூலம் ஒவ்வொரு படகுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் 2 லட்சம் வரையாகும்

இதனைத் தவிர்ப்பதற்காகவே தொடர்ந்து பல ஆண்டுகளாக நடவடிக்கை தேவை என  அரசையும் மீன்வளத்துறை நிர்வாகத்தையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் அது வழக்கம் போல செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது மீன்பிடி அனுமதி சீட்டு கூட பெறாமல் விசைப்படகுகள் கடலுக்கு சென்றதை தடுக்க வேண்டிய மீன்வளத்துறை நிர்வாகம் அதனை அனுமதித்து வேடிக்கை பார்த்தது எந்த வகையிலும் மன்னிக்க கூடிய விசயமல்ல கடற்படை ( நேவி) கடலோர காவல் பாதுகாப்பு குழுமம் கோஸ்டல் மெரைன் போலீஸ் சர்வீஸ் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மெரைன் fish Enforce ment என அனைத்து நிர்வாகங்கள் இருந்தும் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என்பது யாரை ஏமாற்றும் வேலை ? 

இச்சூழலில் மீன்பிடி அனுமதி சீட்டு வாங்காமல் கடலுக்கு சென்றஅனைத்து விசைப்படகுகளுக்‌கும் 17/06/ 2024 முதல் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் மானிய விலை டீசல் வழங்கப்படாது என்றும் கண்துடைப்பு அறிவிப்பு செய்தது யாரை திருப்தி படுத்த இது போன்ற அறிவிப்புகள்‌ ஆண்டு தோறும் போலியாக வருவது தானே‌‌ எந்த ஒரு ஆண்டாவது அந்த அறிவிப்புகள்‌ முறையாக நிறைவேற்றப்பட்டது உண்டா?பிறகு ஏன் இந்த அறிவிப்பு ? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு ?  உண்மையிலேயே மீன்பிடி முறையை ஒழுங்கு படுத்த வேண்டும்.

இது விசயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீன் வளத்துறை நிர்வாகம் கருதினால் முதல் கட்டமாக செய்ய வேண்டியது அனைத்து விசைப்படகு தாரர்களுக்குக்கும் நோட்டீஸ் அனுப்புவதை கைவிட வேண்டும் மாறாக முதலில் கடலுக்கு கிளம்பிய ஒன்று முதல்  50 படகுகளுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் ஏனெனில் இந்த 50 படகுகள் கடலுக்கு கிளம்பிய பின் தானே மற்ற படகுகள் கிளம்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன

மாறாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு  கிளம்பாமல் இருக்க முடியாது தானே இதனால் சட்டத்தை மீறி சென்ற 50 படகுகளுக்கு என்ன நடவடிக்கையோ  அதுதானே நமக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுத் தான் அவர்களும் கடலுக்கு சென்றுள்ளனர்.

நடவடிக்கை என்று வரும்பொழுது அதற்கு  எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் அவர்களுக்கு ஆதரவாக  அரசியல் தலையீடு வரும் எனவே வேறுவழி இன்றி நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும் இது தானே வருடம் தோறும் நடப்பது அடுத்து இந்த நடவடிக்கையானது விதி முறை மீறலில் ஈடுபட்ட மேலே சொன்ன 6 மாவட்டங்களுக்கும் பொருந்தும் தானே ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன ?

இராமேஸ்வரத்தில் விசைப்படகுகளுக்கு  மீன்பிடி அனுமதி சீட்டு  வழங்கப்படவில்லையாம் அதற்கு எது காரணம் என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை அடுத்து  மண்டபத்தில் ஒரு விசைப்படகு கடலில் மூழ்கி மூன்று மீனவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு அனுதாபம் தெரிவித்து அவர்களாகவே கடலுக்கு செல்ல வில்லையென்றே சொல்லப்படுகிறது

எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் மீன்வளத்துறையை கண்டிக்க வேண்டிய நிலையை மீன்வளத்துறை ஏற்படுத்த வேண்டாம் என கடல் தொழிலாளர் சங்கமும் மீனவர்களும் கோரிக்கையாக விடுக்கின்றனர்.

 

VIDEOS

Recommended