• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி அருகே கல் குவாரி உரிமையாளர் மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

திருச்சி அருகே கல் குவாரி உரிமையாளர் மிரட்டி பணம் பறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

JK

UPDATED: Oct 14, 2024, 6:50:00 PM

திருச்சி மாவட்டம்

புலிவலம் அடுத்துள்ள கரகட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள கல்குவாரியை திருச்சி மாவட்டம் மதுராபுரியை சேர்ந்த சஞ்சீவி செட்டியார் எங்களுடைய மகன் தங்கவேல்(43) என்பவர் அனுமதி பெற்று நடத்தி வருகிறார். 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார் (32), மணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர் செல்லதுரை (35), மேலும் கட்சியில் பொறுப்பு ஏதும் இல்லாமல் செயல்படும் சுப்பிரமணி என்பவருடைய மகன் ராஜாங்கம் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபருடன் தங்கவேலிடம் அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்தி வருவதாக அதற்கு ரூபாய் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

கல் குவாரி

மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியும் கத்தியை காட்டியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் youtube சேனல் மூலமாக கரகாட்டம்பட்டியில் அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி இயங்கி வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்பதாகவும் மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அந்த யூட்யூபில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தங்கவேல் புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்லதுரை மற்றும் ராஜாங்கம் ஆகியோரை கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சி

மேலும் வழக்கில் தொடர்புடைய அருண்குமார், கேமராவில் படம் பிடித்த ஆனந்தன், தனபால், வினோத் மற்றும் மிரட்டல் வீடியோவை பதிவு செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுபோன்ற கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended