கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை.

ஆனந்த்

UPDATED: Nov 21, 2024, 9:31:15 AM

திருவேற்காடு

சென்னையை அடுத்த திருவேற்காடு கஸ்தூரிபாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (46). இவர் கடந்த 2013ஆம் ஆண்டு திருவேற்காடு சூரிய நாராயண நகர் பகுதியைச் சேர்ந்த உதய் குமார், செந்தில் குமார், வினோத் குமார் ஆகியோரை ஆபாசமாக திட்டியதுடன் உருட்டுக்கட்டை மற்றும் பிளேடால் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக திருவேற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடுங்காவல் சிறை தண்டனை

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சக்திவேலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30 ஆயிர அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏஞ்சல் ஸ்டூபிலா மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended