• முகப்பு
  • அரசியல்
  • ஒரே நாடு....! ஒரே தேர்தல்...! அப்பா ஆதரிப்பார்! மகன் எதிர்ப்பார்! இது தான் திமுக...! 

ஒரே நாடு....! ஒரே தேர்தல்...! அப்பா ஆதரிப்பார்! மகன் எதிர்ப்பார்! இது தான் திமுக...! 

இரா.பாலமுருகன்

UPDATED: Apr 14, 2024, 7:57:19 PM

தென்காசி நாடளுமன்ற தொகுதியில் பாஜக ஆதரவுடன் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி தொகுதிக்கான தனது வாக்குறுதியை வெளியிட்டு சங்கரன் கோவிலில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,

அப்போது அவர் கூறியதாவது,

தென்காசி தொகுதியில் போட்டியிடும் தனக்கு தொகுதி முழுவதும் மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக உள்ளது எனவே நிச்சயம் தென்காசியில் தாமரை மலரும் மேலும் தான் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் தன்னிடம் கல்லறை கட்டுவதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் தான் இன்று வெளியிட்டுள்ள டிஜிட்டல் தேர்தல் வரைவறிக்கையை வெளியிட்டார். இந்த வரைவறிக்கை துண்டு பிரசுரங்களில் பார்கோடு பிரிண்ட் செய்துள்ளோம் பொதுமக்கள் அதனை ஸ்கேன் செய்து எனது வாக்குறுதியை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் தங்களது கோரிக்கைகளையும் பதிவு செய்யலாம் பொதுமக்கள் பதிவு செய்யும் கோரிக்கைகள் நான் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

அதுபோல் ராஜபாளையத்தில் பருத்தி பாதுகாப்பு கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புளியங்குடி பகுதியில் எலுமிச்சை குளிர்சாதன கிட்டங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும்

திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் மூடப்படும் முதல் கையெழுத்தை மது கடை மூடுவதற்காக தான் இருக்கும் என்று பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் பாஜக அரசு அமைந்த உடன் தமிழகத்தில் மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக அரசு அறிவித்திருப்பதால் அது தங்களுக்கு சிறுபான்மையின வாக்குகளை பாதிக்குமா என்று கேட்டதற்கு பொது சிவில் சட்டமானது எந்தவித சிறுபான்மையினரையும் பாதிக்காது அது தெரியாதவர்களே ஊடகங்கள் மூலம் மக்களை குழப்பி வருகின்றனர் என தெரிவித்தார்.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் அது ஜனநாயகத்தை பாதிக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் அவரே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு பெரும் பணம் மிச்சப்படும் என தெரிவித்துள்ளார் ஆகவே அப்பா ஆதரவு அளித்த திட்டத்தை மகன் எதிர்க்கிறார் என்று தெரிவித்தார்.

VIDEOS

Recommended