நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முன்னாள் மேலாளர் கைது.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 16, 2024, 8:19:08 AM

நடிகை கௌதமி நில மோசடி புகார் 

நடிகை கௌதமி அளித்த நிலமோசடி புகாரின் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 6 பேரை தேடிவந்த நிலையில் அவரின் முன்னாள் மேலாளர் அழகப்பன் (64) நேற்று கைது செய்யப்பட்டார். 

தமிழ் சினிமாவில் மிக பிரபல நடிகையாக வலம் வந்த கௌதமி சினிமாவில் பிசியாக நடித்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி வைத்திருந்தார்.

மேலும் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார்.


News

இந்நிலையில் அவரிடம் மேலாளராக பணியாற்றிய அழகப்பன், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில், நடிகை கௌதமி மற்றும் அவரின் அண்ணன் ஸ்ரீகாந்த்துக்கு சொந்தமான சொத்தான சுமார் ரூ.25 கோடி மதிப்பிலான 46 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்றதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நடிகை கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரின் மேலாளர் அழகப்பன், அழகப்பன் மனைவி நாச்சியாள், சதீஷ்குமார், ஆர்த்தி

பாஸ்கரன் மற்றும் ரமேஷ்சங்கர் என நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள் உட்பட ஆறு நபர்கள் மீது மோசடி,மிரட்டல்,போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 


Latest Tamil Crime News -

நவம்பர் 9 ஆம் தேதி நடிகை கௌதமி காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மோசடி செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்கள், இடத்தின் மதிப்பு, எப்போது வாங்கப்பட்டது உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்து விளக்கம் அளித்தார்.

அதனடிப்படையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த அழகப்பன் உள்ளிட்ட 6 பேரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அழகப்பனை காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended