மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து அலுவலக அறைக்குள் தற்கொலை.

L.குமார்

UPDATED: Aug 2, 2024, 4:34:08 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி

துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக மங்காவரம் பகுதியைச் சேர்ந்த ரவி வயது 52 என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சுமதி வயது 48 என்ற மனைவியும் , அம்மு மதிமலர், சுஜிதா என்ற மூன்று மகள்களும் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மாலை ரவி தனது உறவினர் அன்பு என்பவருக்கு போன் செய்து தனது மூன்றாவது மகள் சுஜிதாவை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் தான் மருத்துவமனைக்கு சென்னை செல்வதாகவும் கூறியுள்ளார். 

Gummidipoondi News In Tamil

அதன்பின் சக ஊழியர்கள் செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது வெகு நேரம் அழைப்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன் அடிப்படையில் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி வந்த உறவினர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தின் கிடங்கு பகுதியில் பார்வையிட்டபோது அங்கு ரவி தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Latest Thiruvallur News & Live

இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது நிலையில் ஒப்பந்த ஊழியர் ரவியின் சட்டை பையில் இருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தற்கொலை

நிலத் தகறாரு காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் தீவிர விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended