- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது சேதம்
ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது சேதம்
ரமேஷ்
UPDATED: Sep 6, 2024, 7:42:17 PM
கும்பகோணம்
மையப் பகுதியான மடத்து தெருவில் ஹோட்டல்கள், பல்வேறு வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வங்கிகள் என அனைத்தும் அருகே அமைந்துள்ளன.
இந்நிலையில் அங்குள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வாசலில் கேஸ் அடுப்பு மூலம் ஃபாஸ்ட் ஃபுட் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது.
கடை ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றம் தீ மல மலவென பரவியதால் கடையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீ அருகில் இருந்த டைலர் கடை மற்றும் காபித்தூள் கிடைக்கும் பரவியது.
Breaking News In Tamil
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக மாறியது. தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து தடை விதைத்து மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.
Latest Kumbakonam News
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதுமே பரபரப்பாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், விபத்தை பார்வையிட்டதோடு, காவல்துறை மூலம் பொதுமக்களை கலைய வைத்து போக்குவரத்தை சீர் செய்தார்.
அதுமட்டுமின்றி தீ விபத்து நடந்த இடத்தின் மிக அருகில் 10 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டதை அடுத்து சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.