• முகப்பு
  • குற்றம்
  • மது போதையில் அரசு பேரூந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்.

மது போதையில் அரசு பேரூந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய 339 சோதனை கருவிகள்.

கார்மேகம்

UPDATED: Dec 4, 2024, 8:41:22 AM

ப்ரீத் அனலைசர்

மது போதையில் பேரூந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய 339 ப்ரீத் அனலைசர் எனப்படும் கருவிகளை வாங்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பேரூந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது

இதன்படி பணியின் போது கைப்பேசிகளை உபயோகப்படுத்த கூடாது மது அருந்தியி இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

ஓட்டுநர்கள்

இக் கட்டுப்பாடு மற்றும் விதி முறைகளை மீறி பேரூந்துகளை இயக்கும் அரசு பேரூந்து ஓட்டுநர்கள் மீதும் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்த நிலையில் தொலை தூர பேரூந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் சிலர் மது போதையில் பேரூந்துகளை இயக்கிச் செல்வதாக பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன

இதையடுத்து மது போதையில் பேரூந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை கண்டறிய மது போதையை சோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் எனப்படும் கருவியை வாங்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது

அரசு பேருந்துகள்

இதன்படி முதல்கட்டமாக 339 கருவிகளை வாங்க முடிவு செய்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இதை கழகத்துக்குள்பட்ட (6) பிரிவுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது

இக் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட  பின்னரே ஓட்டுநர் நடத்துநர்கள் பேரூந்துகளை இயக்க அனுமதிக்கப் படுவார்கள் எனவும் இதில் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை பேரூந்தை இயக்க அனுமதிக்காமல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

VIDEOS

Recommended